ஜல்ஜீவன் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம், 09 ஜூன் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சேர்ந்த தவெக உறுப்பினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர் அந்த புகார் மனுவில் கடந்த திமுக ஆட்சியின் போது சாயல்குடியில் ரூ 40.08 கோடி மதிப்பீட்டில்
Ramanathapuram Collectorate Office


ராமநாதபுரம், 09 ஜூன் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சேர்ந்த தவெக உறுப்பினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர் அந்த புகார் மனுவில் கடந்த திமுக ஆட்சியின் போது சாயல்குடியில் ரூ 40.08 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது குழாய் பதிக்கும் பணியை குறைந்த ஆழத்தில் போட்டுள்ளனர்.

குழாய் பதிக்கும் பணிக்காக உடைக்கப்பட்ட சாலைகளை இதுவரை சீரமைக்காமல் குண்டும் குழியுமாக போட்டு விட்டு சென்றதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அது மட்டும் இன்றி குறைந்த ஆழத்தில் போடப்பட்டதால் குழாய்கள் சேதமடையும் நிலையில் உள்ளது 40 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் திமுகவினரின் தலையீடு இருந்ததால் முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது.

எனவே தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சாயல்குடி ஜல்ஜீவன் திட்ட முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்ட குழாய்களை முறையாக பதித்து உடைக்கப்பட்ட சாலைகளை மீண்டும் போட்டுக் கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN