ஜூன் 9 ( இன்று) உலக அங்கீகார தினம்...!
தமிழ்நாடு, 09 ஜூன் (ஹி.ச.) உலக அங்கீகார தினம் (World Accreditation Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 9 அன்று கொண்டாடப்படுகிறது. உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளில் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் தரச் சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரத்தின் முக்கியத்துவத்த
H


தமிழ்நாடு, 09 ஜூன் (ஹி.ச.)

உலக அங்கீகார தினம்

(World Accreditation Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 9 அன்று கொண்டாடப்படுகிறது.

உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளில் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் தரச் சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துரைக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு கொண்டாட்டம்:

உலக அங்கீகார தினம் (WAD 2026) ஜூன் 9 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மையக்கருத்து (Theme) Innovation, Trust and Sustainability: The Power of Accreditation புத்தாக்கம், நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை: அங்கீகாரத்தின் சக்தி என்பதாகும்.

கண்காணிப்பு அமைப்புகள்:

உலகளாவிய அளவில் அங்கீகாரத்தை வழங்கும் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, தற்போது Global Accreditation Cooperation (Global ACI) மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்தியாவில் தேசிய அளவில் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய இந்திய தரக் கவுன்சில் (Quality Council of India - QCI) மற்றும் NABL போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / Durai.J