நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது - நாட்டுத் துப்பாக்கி, கருப்பு மருந்து, பால்ரஸ், சிகப்பு பாஸ்பரஸ் பறிமுதல்
கள்ளக்குறிச்சி, 09 ஜூன் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் வசித்து வரும் சிமோன் என்பவர் அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்துவதாக தனி பிரிவு காவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
Sankarapuram Police Station


கள்ளக்குறிச்சி, 09 ஜூன் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் வசித்து வரும் சிமோன் என்பவர் அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்துவதாக தனி பிரிவு காவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து விரியூர் கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிமோன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் சோதனை செய்த போது நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டுத் துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய கருப்பு மருந்து 100 கிராம், பால்ரஸ் 100 கிராம் சிகப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட 250 கிராம் பொருட்கள் இருந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் சிமோன் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில் காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்குபிடி விசாரணை செய்த போது அனுமதி இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தியது தெரிய வந்தது.

இதனை அடுத்து நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய பால்ரஸ்,பாஸ்பரஸ், நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தும், சிமோன் என்பவரை கைது செய்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN