மின்வெட்டால் இருளில் மூழ்கிய அமைச்சர் ஷாஜகானின் ஆய்வுக் கூட்டம்
நாகை, 09 ஜூன் (ஹி.ச.) நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் என்கிற ஷாஜகான் தலைமையில், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்
Minister Shahjahan's review meeting plunged into darkness due to a power outage.


நாகை, 09 ஜூன் (ஹி.ச.)

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் என்கிற ஷாஜகான் தலைமையில், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள், துறைசார் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். வருகை தந்த 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனடியாக மின் விநியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கூட்ட அரங்கம் முழுவதும் இருள் சூழ்ந்ததால் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. இருப்பினும், கூட்டத்தை தொடர வேண்டிய அவசியம் கருதி, அதிகாரிகள் உடனடியாக எல்இடி விளக்குகளை ஏற்பாடு செய்தனர்.

அமைச்சர் ஷாஜகான், மின்வெட்டை பொருட்படுத்தாமல் எல்இடி வெளிச்சத்திலேயே ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.

பேரிடர் கால முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க நடந்த கூட்டத்திலேயே மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசுபொருளானது.

மழைக்காலத்திற்கு முன்பாக மின்சார விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b