பொள்ளாச்சி வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான நபர் தவெகவில் இணைந்ததாக பரவும் தகவல் பொய் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
சென்னை, 09 ஜூன் (ஹி.ச) பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்டு, 2019ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த
Sengottiayan


Hh


சென்னை, 09 ஜூன் (ஹி.ச)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்டு, 2019ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தளப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தாம் தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து மேலே குறிப்பிடப்பட்ட நபரும் வந்துச் சென்றிருக்கலாம் என்றும், அவருடன் தனக்கு முன்பாக எந்தவித அறிமுகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ