Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை அதே பகுதியில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
விசாரணை முடிந்து காவல் நிலையத்திலிருந்து தாயாருடன் வீடு திரும்பிய நிலையில், அவர் திடீரென உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், விசாரணையின் போது காவல்துறையினர் வெங்கடேஷை தாக்கியதே அவரது மரணத்துக்கு காரணம் என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள காவல்துறை தரப்பு, வெங்கடேஷ் நீண்ட காலமாக மது போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும், அவர் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது அவரை யாரும் தாக்கவில்லை என்றும், விசாரணைக்குப் பின்னர் அவர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
வெங்கடேஷின் மர்ம மரணம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது உடல் சென்னை கே.கே நகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை வெளியான பின்னரே மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b