புதுச்சேரியில் மேலும் 3 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
புதுச்சேரி, 09 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, என். ரங்கசாமி ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் கே. நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிர
அமைச்சர்கள்


புதுச்சேரி, 09 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, என். ரங்கசாமி ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் கே. நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், அமைச்சரவையில் இருந்த மூன்று காலிப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் சட்டமன்ற உறுப்பினர்களான ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

புதிய அமைச்சர்களுக்கு கைலாஷ்நாதன் விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P