Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச)
தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலக சட்டப்பேரவை துணைச் செயலாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில், வேட்பாளர்கள் நேரில் ஆஜராகிய நிலையில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட வேட்பாளர்கள் பரிசீலனைக்காக வந்திருந்தனர்.
இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரவீன் சக்கரவர்த்தியைத் தவிர மற்ற அனைவரும் சுயேச்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்த பின்னர், தகுதியான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ