சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதன்மையாக்கப்பட்டது
சென்னை, 09 ஜூன் (ஹி.ச.) தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்ற போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதைச் செயல்படுத்த
_


சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்ற போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இதைச் செயல்படுத்தும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது.

இந்தப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே. பவானீஸ்வரி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.

இந்தப் படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணைக் காவல் கண்காணிப்பாளார்கள், 4 ஆய்வாளர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் முதல் கட்டமாக நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த அதிரடிப்படையினர் பிற போலீஸாரிடமிருந்து தனித்துவமாக தெரியும் வகையில் பிரத்யேகச் சீருடை மற்றும் புதிய சின்னம் (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படையினருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடையும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தச் சீருடை கருப்பு நிற தொப்பி, பெல்ட், கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் என தயாராகி உள்ளது.

மேலும் கருப்பு நிறத்தினாலான பெல்ட் வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதன்மையாகப் பாடப்பட்டது.

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் சி. ஜோசப் விஜய் ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில்,சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி, காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

மேலும்,500க்கும் அதிகமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை பெண் காவலர்கள், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / Durai.J