Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய், கடந்த மாதம் 10ஆம் தேதி பொறுப்பேற்ற போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
இத்திட்டம் கடந்த 29-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைக்க உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப் படை செயல்படும் நிலையில், அதன் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 2 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 4 காவல் ஆய்வாளா்கள், 8 காவல் உதவி ஆய்வாளா்கள், பிற பதவிகளைச் சோ்ந்த 20 காவலா்கள் இருப்பாா்கள் என அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P