Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடலோர கர்நாடக பகுதிகளிலிருந்து கடலோர ஆந்திர பகுதிகள் வரை 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதேபோல வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில், இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்பதால் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P