Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.
இது இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலும், குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் நலன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அனுசரிக்கப்படுகிறது.
வரலாறு மற்றும் முக்கியத்துவம்:
ஜவஹர்லால் நேரு குழந்தைகளுக்கு மத்தியில் நேரு மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்டார். குழந்தைகள் மீது அவர் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.
இளம் குடிமக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான தேசத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தவும், குழந்தைகளின் முக்கியத்துவத்தை குறித்து விழிப்புணர்வு உண்டாக்கவுமே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நேரு குழந்தைகளின் கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை வலியுறுத்தினார்.
அவரது பிறந்த நாள், குழந்தைகள் தங்கள் திறனை முழுமையாக அடையத் தேவையான வளர்ப்புச் சூழலை உறுதி செய்வதற்கான ஒரு நினைவூட்டலாக செயல்படுகிறது.
உலகளவில், ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில், தேசிய அளவில் நவம்பர் 14 ஆம் தேதி பின்பற்றப்படுகிறது.
கொண்டாட்டங்கள்:
பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களில், குழந்தைகள் தினமானது பல்வேறுவிதமான போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகளுடன் களைக்கட்டும்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளின் அப்பாவித்தனத்தையும், திறனையும் கொண்டாடும் வகையில், அவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவிக்கின்றனர்
Hindusthan Samachar / JANAKI RAM