Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.)
தற்போது, ஆப்பிளின் முதல் புத்தக பாணி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோனின் விலை குறித்த மதிப்பீட்டை ஒரு மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் iPhone Fold-ன் வெளியீடு அல்லது மேம்பாட்டை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், தொழில்நுட்ப நிறுவனம் வரும் செப்டம்பர் 2026-ல், ஐபோன் 18 ப்ரோ சீரிஸூடன் புதிய ஐபோன் ஃபோல்டை அறிமுகப்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆப்பிளின் 2nm A20 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படலாம். மேலும், இந்த போன் iOS 27 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் ஐபோன் ஃபோல்ட் விலை, அம்சங்கள்...
Fubon Research ஆய்வாளர் ஆர்தர் லியாவோவை மேற்கோள்காட்டி, Investing.com ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோனை, iPhone Fold என்ற பெயரில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை $2,399 (தோராயமாக ரூ. 2,14,000) விலையில் ஆப்பிள் நிறுவனம் விற்கலாம் என்று இந்த தகவல் தெரிவிக்கிறது.
விநியோகச் சங்கிலியின் தற்போதைய நிலை மற்றும் ஆப்பிளின் லாப வரம்புத் தேவையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் iPhone Fold-ன் பின்புற பேனல், கீல்கள் மற்றும் பிற இலகுரக கூறுகள் என உற்பத்தி செய்ய பிரீமியம் மற்றும் இலகுரக பொருட்களை நிறுவனம் பயன்படுத்துவதே ஐபோன் ஃபோல்ட் விலை உயர்ந்ததாக இருக்க காரணமாக இருக்கலாம்.
அதாவது, இதற்காகும் பொருள் செலவுகள், எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்கு வழிவகுக்கும் என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனம் எதிர்பார்க்கிறது என்பதை அறிக்கை கூறுகிறது.
ஐபோன் ஃபோல்ட்டின் விலை மிகவும் விலையுயர்ந்த ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலை ($1,999 அல்லது தோராயமாக ரூ.1.78 லட்சம்) விட அதிகமாக இருக்கலாம் என்றாலும், ஆப்பிள் அதன் லைஃப் சைக்கிளில் அதன் முதல் மடிக்கக்கூடிய மொபைலின் 15.4 மில்லியன் யூனிட்ஸ்களை விற்க முடியும் என்றும், இவற்றில் 5.4 மில்லியன் யூனிட்ஸ்கள் 2026-ல் விற்கப்படும் என்றும் Fubon Research நம்புகிறது.
முன்பு குறிப்பிட்டபடி, ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் 2026-ல் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸுடன் ஐபோன் ஃபோல்டை அறிமுகப்படுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மொபைல்கள் இன்னும் வெளியிடப்படாத ஆப்பிள் A20 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படும் என்றும் ஒரு வதந்தி பரவியுள்ளது. இது 2nm ப்ராசஸில் உருவாக்கப்படலாம்.
அதே போல ஐபோன் ஃபோல்டின் உட்புறத்தில் LTPO+ ஃப்ளெக்சிபில் OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும், இது ஐபேட் மினியைப் போன்ற அளவில் இருக்கலாம்.
இதன் கவர் டிஸ்ப்ளே 5-இன்ச் அல்லது 6-இன்ச் திரையாக இருக்கலாம். அதே நேரத்தில் மடிக்கக்கூடிய டச்ஸ்கிரீன் 8-இன்ச் டிஸ்ப்ளேவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முந்தைய அறிக்கைகள் இது டைட்டானியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு ஃபிரேமைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன.
கவர் மற்றும் இன்னர் டிஸ்ப்ளேவில் தலா ஒன்றும், பின்புற பேனலில் இரண்டு என இது மொத்தம் நான்கு கேமராக்களைக் கொண்டிருக்கலாம்.
Hindusthan Samachar / JANAKI RAM