Nano Banana Pro என்ற மேம்படுத்தப்பட்ட AI மாடலை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்
சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.) நாம் பதிவேற்றும் புகைப்படங்களை 3D டிஜிட்டல் மினியேச்சர்களாக மாற்றிக் கொடுத்து வந்த ''நானோ பனானா’வின் (NANO BANANA) புதிய மேம்படுத்தப்பட்ட AI மாடலை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் AI கருவியான ஜெமினி 2.5
Nano Banana Pro என்ற மேம்படுத்தப்பட்ட AI மாடலை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்


சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)

நாம் பதிவேற்றும் புகைப்படங்களை 3D டிஜிட்டல் மினியேச்சர்களாக மாற்றிக் கொடுத்து வந்த 'நானோ பனானா’வின் (NANO BANANA) புதிய மேம்படுத்தப்பட்ட AI மாடலை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுளின் AI கருவியான ஜெமினி 2.5 flash இமேஜ் மூலம், பயனர்கள் தங்கள் சொந்தப் புகைப்படங்களை மினியேச்சர் மாடல்களாக மாற்றி டிரெண்ட் செய்து வந்தனர்.

உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த 'நானோ பனானா' AI மூலம் துல்லியமான 3D மாடல்களை உருவாக்க முடியும். இதில் நாம் பதிவேற்றும் புகைப்படங்களில் உள்ள முகபாவங்கள், உடைகள் மற்றும் பின்னணி விவரங்கள் போன்றவற்றை அப்படியே வழங்குகிறது.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் ’Nano Banana Pro’ எனப்படும் மேம்படுத்தப்பட்ட AI புகைப்படம் உருவாக்கும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது 14 படங்களை ஒரு சேர இணைத்து புதிய காட்சிகளை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது.

அத்துடன், போஸ்டர், அழைப்பிதழ், இன்ஃபோகிராபிக்ஸ் போன்றவற்றை உருவாக்குவதற்கு சிறந்ததாகப் பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, படங்களில் நேரடியாக வாசிக்கக்கூடிய எழுத்துகளை பல மொழிகளில் உருவாக்கும் திறன் கொண்டுள்ளது.

பயனர்கள், ஒளி, நிறம், கேமரா கோணம் போன்றவற்றை எளிதில் மாற்றலாம் என்றும் 4K resolution வரை பல aspect ratio-களில் படங்களை உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக உருவாக்கப்படும் புகைப்படங்களில் வாட்டர்மார்க் இடம்பெற்றிருக்கும். அதேநேரம் கட்டண சந்தாதாரர்களுக்கு வாட்டர் மார்க் இடம் பெறாது என்று கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM