கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு - ஒடிசாவை சேர்ந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கோவை, 2 டிசம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 10 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்ணு சரண் பிரதான் (42) மற்றும் நஹு பிரதான் (34) ஆகியோர்களை தொண்டாமுத்தூர் காவல் துறையினர் கைது
Case of seizure of 10 kilograms of ganja in Coimbatore: Gangster Prevention Act invoked against criminals from Odisha — Coimbatore district police action.


Case of seizure of 10 kilograms of ganja in Coimbatore: Gangster Prevention Act invoked against criminals from Odisha — Coimbatore district police action.


கோவை, 2 டிசம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 10 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்ணு சரண் பிரதான் (42) மற்றும் நஹு பிரதான் (34) ஆகியோர்களை தொண்டாமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக பிஷ்ணு சரண் பிரதான் (42) மற்றும் நஹு பிரதான் (34) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அந்த நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான பிஷ்ணு சரண் பிரதான் மற்றும் நஹு பிரதான் ஆகிய இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / V.srini Vasan