Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 2 டிசம்பர் (ஹி.ச.)
சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக சஞ்சார்
சாத்தி செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு
சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு மட்டும் 120 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில், சைபர் பாதுகாப்புக்காக
மத்திய அரசு பிரத்தேயகமாக உருவாக்கியுள்ள
சஞ்சார் சாத்தி செயலியை புதிய போன்களில் நிறுவிய பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதனை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 90
நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி செயலி கடந்த ஜனவரியில்
அறிமுகம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன செல்போன்களை இந்த செயலி கண்டுபிடிக்க உதவியுள்ளது.அக்டோபரில் மட்டும் இந்த செயலி உதவியுடன் 50,000 ஸ்மார்ட்போன்கள்
மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராய்ட்டர்ஸ்
செய்தியில்
கூறப்பட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி இந்திய தொலைத்தொடர்புத் துறையின் முயற்சியாகும். இது குடிமக்களுக்கு செல்போன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த ஒரு வெப் போர்ட்டல் மற்றும் செல்போன் செயலியை வழங்குகிறது.
இது பயனர்கள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகள் குறித்து புகாரளிக்கவும், மோசடிகளை தடுக்கவும், அரசு தொடர்பான பிற குடிமக்கள் சேவைகளை அணுகவும் அனுமதிக்கிறது.
மோசடி எதிர்ப்பு செல்போன் செயலியை உருவாக்குவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கெனவே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த புதிய உத்தரவை சாம்சங், விவோ, ஓப்போ, ஷாவ்மி நிறுவனங்களுடன் சேர்ந்து ஆப்பிளும் பின்பற்ற
வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM