வெடிகுண்டு மிரட்டலை அடுத்து குவைத்-ஐதராபாத் இண்டிகோ விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கம்
ஐதராபாத், 2 டிசம்பர் (ஹி.ச.) குவைத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெறும் என இ-மெயில் வழியே மிரட்டல் விடப்பட்டு உள்ளது. ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த இந்த மிரட்டலை தொடர்ந்து, அந
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து குவைத்-ஐதராபாத் இண்டிகோ விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கம்


ஐதராபாத், 2 டிசம்பர் (ஹி.ச.)

குவைத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெறும் என இ-மெயில் வழியே மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த இந்த மிரட்டலை தொடர்ந்து, அந்த விமானம் மும்பைக்கு இன்று திருப்பி விடப்பட்டது.

இதன் பின்னர் அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதன் பின்பு தனியான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது.

இது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவத்தில், விமான பயணிகளின் விவரம் எதுவும் தெரிய வரவில்லை.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் இது பற்றி எந்த அறிக்கையையும் விடவில்லை.

Hindusthan Samachar / JANAKI RAM