Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 2 டிசம்பர் (ஹி.ச.)
நேற்று (டிச.,01) தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச 19ம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், செங்கோட்டையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், புதிய தொழிலாளர் சட்டங்கள், எஸ்.ஐ.ஆர்., விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் முதல் நாளே சபையை முடக்கினர்.
இந்நிலையில் இன்று (டிச.,02) 2வது நாள் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. லோக்சபா கூடியதும் எஸ்ஐஆர் பணி குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை. அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 12 மணி வரை ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
அதேபோல், ராஜ்யசபாவை இன்று (டிச.,02) துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் 2வது நாளாக நடத்தி வருகிறார்.அங்கு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b