வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவமாக மாற்றும் புதிய அம்சம்
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.) வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவமாக மாற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யூசர்கள் அதிக சத்தம் நிறைந்த இடங்களில் அல்லது ஒருவருடைய வாய்ஸ் மெசேஜை பிறர் முன்னிலையில் கேட்க
வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவமாக மாற்றும் புதிய அம்சம்


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவமாக மாற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் யூசர்கள் அதிக சத்தம் நிறைந்த இடங்களில் அல்லது ஒருவருடைய வாய்ஸ் மெசேஜை பிறர் முன்னிலையில் கேட்க வேண்டாம் என்று நினைப்பது போன்ற சூழ்நிலையில் இந்த அற்புதமான அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

இதனை யூசர்கள் நேரடியாக தங்களுடைய சாதனத்திலேயே பயன்படுத்த முடியும். இதில் வாட்ஸ்அப் அல்லது மூன்றாம் தரப்பினருடைய தலையீடு இருக்காது.

இந்த அம்சம் உலக அளவில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் யூசர்களுக்கு பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது. வாய்ஸ் மெசேஜ்களை எப்படி எழுத்து வடிவமாக மாற்றுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை எனேபிள் செய்வதற்கு முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் அப்ளிகேஷனை திறந்து அதில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு செல்லுங்கள்.

பிறகு சேட்ஸ் என்பதை தேர்வு செய்து வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் என்பதை கிளிக் செய்யவும். இந்த அம்சத்தை உங்களால் ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியும்.

அது மட்டுமல்லாமல் இந்த வாய்ஸ் மெசேஜை எந்த மொழியில் நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.

இதனை செய்வதற்கு யூசர்கள் செட்டிங்ஸ் > சேட்ஸ் > டிரான்ஸ்கிரிப்ட் லாங்குவேஜ் ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.

இந்த ஆப்ஷனை நீங்கள் அணைத்து வைக்கும்போது உங்களுடைய மொழி தேர்வு ரீசெட் செய்யப்படும்.

வாய்ஸ் மெசேஜை எப்படி எழுத்து வடிவமாக மாற்றுவது?

முதலில் உங்களுடைய போனில் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் எனேபிள் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு சேட்டில் உள்ள வாய்ஸ் மெசேஜை டாப் செய்து அழுத்திப் பிடிக்க வேண்டும். பிறகு காண்பிக்கப்படும் டிரான்ஸ்கிரைப் ஆப்ஷனைத் தட்டுங்கள்.

இப்போது வாய்ஸ் மெசேஜில் உள்ள கன்டென்ட் எழுத்து வடிவமாக உங்களுக்கு டிஸ்ப்ளே செய்யப்படும்.

ஒரு வேளை அந்த கன்டென்ட் நீளமாக இருக்கும் பட்சத்தில் மெசேஜை முழுவதுமாக பார்ப்பதற்கு உள்ளே காணப்படும் மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.

அதே போல iOS 17 மற்றும் அதன் பிறகான சாதனங்களில் ஆங்கிலம், அரபிக், சைனீஸ், டேனிஷ், டச், பினிஷ், பிரென்ச், ஜெர்மன், ஹீப்ரு, இத்தாலியன், ஜாப்பனீஸ், கொரியன், மலாய், நார்வேரியன், போர்டுகீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ், ஸ்வீதிஷ், தாய் மற்றும் துருக்கி மொழிகள் பயன்படுத்துவதற்கு கிடைக்கின்றன. ஐபோனில் இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு Siri ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும்.

வாய்ஸ் மெசேஜ் எழுத்து வடிவமாக மாறாததற்கு என்னென்ன காரணங்கள் இருக்கலாம்?

வாய்ஸ் மெசேஜில் பேசப்பட்டுள்ள மொழி நீங்கள் தேர்வு செய்த டிரான்ஸ்கிரிப்ட் மொழியுடன் ஒத்துப் போகாத பட்சத்தில் அது எழுத்து வடிவமாக மாறாது.

வாய்ஸ் மெசேஜில் உள்ள பேக்ரவுன்ட் சத்தம் காரணமாக ஒரு சில வார்த்தைகளை அடையாளம் காண முடியாமல் போனாலும், அந்த மெசேஜில் உள்ள மொழிக்கான ஆதரவு வாட்ஸ்அப்பில் இல்லாவிட்டாலும் உங்களால் அதனை டிரான்ஸ்கிரைப் செய்ய முடியாது.

Hindusthan Samachar / JANAKI RAM