Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 2 டிசம்பர் (ஹி.ச.)
கோவை துடியலூர் அடுத்து உள்ள கதிர்நாயக்கன்பாளையம் கிரீன்பீல்ட் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். வெல்டிங் வொர்க்சாப் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி 25 வயதான காயத்திரி. இவர்களுக்கு 3 வயதில் மகனும், 3 மாத பெண் குழந்தை உள்ளது. காயத்திரி ஆன்லைனில் துணிகளை வியாபாரம் செய்து வருகிறார்.
தனது மாமனாரை தொப்பம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு விட்டு டூவிலரில் அவர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, கோவையில் இருந்து அரசு பேருந்து ஒன்று மேட்டுப்பாளையம் செல்ல வந்துக் கொண்டு இருந்தது. தொப்பபட்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது, முன்னால் டூவிலரில் சென்று கொண்டு இருந்த காயத்திரி மீது மோதியது.
அதில் டூவிலர் இடதுபுறமாக விழுந்தது. வலது புறமாக காயத்திரி விழ அவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.
அதில் காயத்திரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாநகர போக்குவரத்து துறை போலீசார் இறந்த காயத்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து அங்கு உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது இந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் கடைகளுக்கு வரும் கார், டூவிலர்கள் உள்ளிட்டவைகள் சாலைகளிலேயே நிறுத்தப்படுவதாலும், அரசு பேருந்து ஓட்டுநர் இடது புறம் ஓரமாக ஒட்டி வந்தாதாலும் இந்த விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan