Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர், 20 பிப்ரவரி (ஹி.ச)
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நிர்வாகத்திற்கு இன்று அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் நீதிமன்ற கட்டடத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து மூத்த காவல் துறை அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டு வளாகத்தில் முழுமையான சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதமாகின என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி சூர்யா காந்த் ஜெய்ப்பூருக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்றும் இதேபோன்து உயர் நீதிமன்றத்திற்கு மிரட்டல் வந்தது. இதனிடையே இன்று மாலை ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் தலைமை நீதிபதி சூர்யா காந்த் கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b