மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச) தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசினார்கள். இருப்பினும் அ.தி.மு.க. சட்டமன்ற
மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசினார்கள்.

இருப்பினும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தனர். அதே சமயம் அவை நடவடிக்கையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முழுமையாக பங்கேற்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தில் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் இன்று சட்டப்பேரையில் பேசுகையில்,

நாங்கள் எப்பொழுது கைதூக்கினாலும் உடனே எங்களுக்குப் பேசுகின்ற வாய்ப்பை வழங்கிய பேரவைத் தலைவருக்கு எனது தொகுதி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டு வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக (நமது மாண்புமிகு தலைவர்) மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேண்டும் என்று, எம்ஜிஆர் ஆசியோடும், ஜெயலலிதா ஆசியோடும் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் அவர்களை வாழ்த்தி (எங்கள் அண்ணன்) ஓ.பி.எஸ். அவர்களின் வாழ்த்துக்களோடு நான் நன்றி கூறி எனது தொகுதி மக்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் எனத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, முன்னாள் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசியுள்ளார்.

அதாவது சட்டபேரவையில் அமைச்சர்களின் பதிலுரை முடிவடைந்த பின்னர் முதலல்வர் மு.க. ஸ்டாலினை அவரது அறையில் அறையில் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிதார். அதில் அவர் கூறுகையில்,

திமுகவின் ஆட்சி சிறப்பாக இன்று நிறைவு பெற்றதன் காரணமாக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன்.

எம்.எல்.ஏ. ஐயப்பனின் செயல், எண்ணம் என்பது தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்றைக்கு சொல்லியிருக்கிறார்.

பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியின் நிலை, தமிழகத்திற்கு செய்த சாதனைகள் எல்லாம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு உள்ளது.

எனத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b