மார்ச் 1-ம் தேதி புதுச்சேரி வருகை தரும் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு - பாஜக தகவல் !
புதுச்சேரி, 20 பிப்ரவரி (ஹி.ச.) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை, பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம், மாநிலத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் இன்று மதியம் சந்தித்து பேசினர். பிரதம
மார்ச் 1-ம் புதுவை வரும் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு - புதுச்சேரி பாஜகவினர் தகவல்


புதுச்சேரி, 20 பிப்ரவரி (ஹி.ச.)

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை, பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம், மாநிலத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் இன்று மதியம் சந்தித்து பேசினர்.

பிரதமர் வருகை தொடர்பாக பேசிய பிறகு செய்தியாளர்களிடம் நிர்மல் குமார் சுரானா கூறியதாவது,

புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1-ம் தேதி மதியம் பிரதமர் மோடி வருகிறார். அரசு முறை பயணமாக புதுவை வரும் அவருக்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கடந்த 14-ம் தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது. தற்சமயம் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. வேறு கட்சிகளுடன் பேசி வருகிறோம். கூட்டணி தொகுதிகள் பிறகு முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில்தான் என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ளது. புதுச்சேரியில் தற்சமயம் அதிமுக இல்லை. புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் அதிமுக, லஜக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரியில் என்டிஏ உடனும், தமிழகத்தில் தவெகவுடன் செல்வதாக வரும் தகவல் வெறும் வதந்திதான். அதுபோல் முதல்வர் ரங்கசாமி ஏதும் சொல்லவில்லை. முதல்வரை அண்மையில் சந்தித்து பிரதமர் புதுச்சேரி வருகை பற்றி பேசினேன்.

என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b