Enter your Email Address to subscribe to our newsletters

ஷில்லாங், 20 பிப்ரவரி (ஹி.ச.)
ஷில்லாங் எம்பி ரிக்கி ஏ.ஜே. சிங்கோன்( வயது 54)நேற்று மாலை ஷில்லாங் அருகே கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இரவு 8:45 மணியளவில் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஷில்லாங் எம்பி ரிக்கி ஏ.ஜே. சிங்கோனின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று எக்ஸ் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது,
மேகாலயாவின் ஷில்லாங்கைச் சேர்ந்த மக்களவை எம்.பி. டாக்டர் ரிக்கி ஏ.ஜே. சிங்கோனின் மறைவால் வருத்தமடைந்தேன்.
பொது சேவை மற்றும் மேகாலயா மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு மரியாதையுடன் நினைவுகூரப்படும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM