Enter your Email Address to subscribe to our newsletters

கொழும்பு, 20 பிப்ரவரி (ஹி.ச.)
10ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் களைகட்டி வருகிறது.
கொழும்பு மைதானத்தில் சூடுபிடித்துள்ள 38ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இலங்கை அணி முதலாவதாக பேட்டிங் களமிறங்கியது.
ஆரம்ப வீரரான பதும் நிசாங்க மின்னல் வேகத்தில் ரன் குவித்தார். அவர் 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரத்நாயகே 44 ரன்கள் சேர்த்தார். மற்றைய பந்தடிப்பாளர்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை.
முடிவில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் மசகட்சா, முசரபாணி, கிரீமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதன் பிறகு, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி பதிலுக்கு பேட்டிங்கைத் தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான பென்னெட் மற்றும் மருமணி ஆகியோர் அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். மருமணி 34 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த ஜோடி, முதலாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் குவித்து அசத்தியது.
இலங்கை பந்துவீச்சாளர்கள் ஜிம்பாப்வேக்கு நெருக்கடி கொடுத்தபோதும், ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் திறமையாக ஆடி ரன்களை சேகரித்தனர். குறிப்பாக பென்னெட் அரைசதம் அடித்து, 63 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
தலைவர் சிக்கந்தர் ராசா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்கள் விளாசினார். கடைசி ஓவர் வரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதன் விளைவாக, அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு அதிர்ச்சித் தோல்வியை வழங்கியது.
இரண்டு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM