Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 20 பிப்ரவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த பசும்பொன் நகரில்
பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை காளியம்மன் உள்ளது கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன.
திருப்பணி வேலைகள் முடிவுற்ற நிலையில் கோவிலில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விமான கலசத்திற்கும் பரிவார தெய்வங்களான வலம்புரி விநாயகர், கற்பக விநாயகர், காலபைரவர், கோட்டை முனிஸ்வரர், வைஷ்ணவி, ஸ்ரீதேவி, துர்க்கை அம்மன், கோட்டை கருப்பசாமி, உள்ளிட்ட தெய்வங்களுக்கும் விமான கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கோட்டை காளியம்மனுக்கு பால் ,பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட 21 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜா வர்மன் கலந்து கொண்டார்.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J