அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி போற்றி வணங்குகிறேன் - முரசொலி செல்வம் நினைவு நாளில் முதல்வர் முக.ஸ்டாலின் மரியாதை
சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.) கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி மறைந்த முரசொலி செல்வத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது புகைப்படத்திற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு முரசொலி செல்வம் தொடர்பாக அவ
Tweet


சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.)

கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி மறைந்த முரசொலி செல்வத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது புகைப்படத்திற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்பு முரசொலி செல்வம் தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளதாவது,

தலைவர் கலைஞரின் பிள்ளையாகவே வளர்ந்தார், முரசொலியில் எங்களுக்கெல்லாம் ஆசானாகத் திகழ்ந்தார்.

இயக்கத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்தார்!

அச்சமில்லை, ஆணவமில்லை, நல்லறிவினில் எம் திராவிடச் செல்வத்துக்கு இங்கு எவரும் நிகரில்லை என நான் உற்ற துணையாகக் கொண்ட முரசொலி செல்வம் அவர்களின் முதலாம் நினைவு நாள் இன்று

அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி போற்றி வணங்குகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ