Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 10 அக்டோபர் (ஹி.ச.)
புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (அக் 10) பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து பேசியுள்ளார். கேரள மாநிலம் தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
சமீபத்திய இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் மறுவாழ்வுக்கு கூடுதல் மத்திய உதவி வழங்குவது குறித்து கேரள முதலமைச்சர் இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை குறித்தும் கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் கேரள முதல்வர் பிரதமர் மோடியிடம் விவாதித்துள்ளார்.
மத்திய-மாநில உறவுகளை வலுப்படுத்துவதற்கும், மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை முடிப்பதை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி கேரள வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கேரள மாநிலத்தின் வளர்ச்சி குறித்த முயற்சிகளுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் பிரதமர் மோடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b