Enter your Email Address to subscribe to our newsletters
கிஷ்த்வார், 11 அக்டோபர் (ஹி.ச.)
ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கலைகளுக்கு பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் கோகர்நாக் பகுதிக்கு உட்பட்ட கிஷ்த்வார் சரகத்தில் கடும் குளிருக்கு இடையே பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் நிலவும் கடும் குளிரில் இந்திய ராணுவ வீரர்களான பலாஷ் கோஷ் மற்றும் சுஜய் கோஷ் ஆகிய இருவரும் சிக்கினர். பனிப்புயலில் சிக்கிய அவர்களை தேடும் பணி தீவிரமடைந்தது. எனினும், இருவரின் உயிரற்ற உடல்களையே சக வீரர்கள் மீட்டனர்.
உயிரிழந்த பலாஷ் கோஷ் மற்றும் சுஜய் கோஷ் இருவரும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுபற்றி இந்திய ராணுவம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது,
அவர்களுடைய தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் எங்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கும். அவர்களுடைய உயரிய தியாகத்திற்கு ராணுவம் மதிப்பளிக்கிறது என தெரிவித்து உள்ளது.
வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம்.
அவர்களின் நலனுக்காக நாங்கள் செயல்படுபோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b