Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)
முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது ரசிகர்கள் அவருடைய திரை வாழ்க்கையின் ஒளிமிகு கட்டத்தை கொண்டாடுகிறார்கள்.
வரவிருக்கும் ஆண்டு, நிவின் பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது.
இது ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் பட வரிசையைக் கொண்டுள்ளது.
முதலில், 2025 கிறிஸ்மஸில் வெளியாகவிருக்கும் “சர்வம் மாயா” என்ற ஹாரர்-காமெடி திரைப்படம் மூலம் நிவின் பாலி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜு வர்கீஸுடன் மீண்டும் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரேமலு படக்குழுவின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” என்ற ரொமான்ஸ் காமெடி படம் வெளியாகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஒரு முழுமையான நிவின் பாலி எண்டர்டெய்னராக அமையும்.
நிவின் பாலியின் பன்முக திறமை இத்தோடு முடிவடையவில்லை. இந்த நவம்பரில் வெளியாகவிருக்கும் “பேபி கேர்ள்” என்ற திரில்லர் படத்தில், நிவின் பாலி தனது தீவிரமான அழுத்தமிகு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம், தமிழ் திரைப்பட உலகிலும் அவரது பங்கு மேலும் வலுப்பெற்று வருகிறது. இயக்குநர் ராம் இயக்கியுள்ள
“ஏழு கடல் ஏழு மலை”என்ற சைக்கலாஜிகல் ரொமான்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் அடுத்தக்கட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக, 2026-ல் வெளியாகும் “பென்ஸ்” திரைப்படத்தில், நிவின் பாலி லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU)-இல் வில்லன் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
அவரது இந்த சக்திவாய்ந்த பட வரிசையின் உச்சமாக, இயக்குநர் B.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில், கோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ஒரு அதிரடி பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படமும் உருவாகி வருகிறது.
திரை உலகைத் தாண்டியும், நிவின் பாலியின் படைப்பாற்றல் மேலும் விரிவடைந்துள்ளது . அவர் தனது முதல் வெப் சீரிஸ் “Pharma” மூலம் டிஜிட்டல் துறையிலும் அறிமுகமாகிறார்.
இது மெடிக்கல் எக்ஸிக்யூட்டிவ் உலகின் பின்னணியில் ஒரு தீவிரமான அதிரடி திரில்லர் டிராமா தொடராக உருவாகி வருகிறது.
தனது தயாரிப்பு நிறுவனமான Pauly Jr. Pictures மூலம், அவர் பல பெரிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் — அதில் பான்-இந்திய சூப்பர்ஹீரோ படம் “மல்டிவெர்ஸ் மன்மதன்” (Multiverse Manmadhan ) மற்றும் நயன்தாரா நடிக்கும் “டியர் ஸ்டூடண்ட்ஸ்” ஆகியவை முக்கியமானவை.
நிவின் பாலி, ரசிகர்கள் அவரிடம் பெரிதும் நேசிக்கும், வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்ததோடு, புதிய சவால்களையும் தைரியமாக ஏற்று வருகிறார். அவரது ரசிகர்களுக்கு, இந்த பிறந்தநாள் ஒரு புதிய சினிமா திருவிழாவின் தொடக்கமாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ