Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)
நடிகை பிரியங்கா மோகன் குறித்து சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தன. இந்நிலையில் இது குறித்து நடிகை பிரியங்கா மோகன் தன் புகைப்படம் போன்று பரவுவது AI என்று கூறி விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கும் சில AI-உருவாக்கப்பட்ட படங்கள் பரவி வருகின்றன.
தயவுசெய்து இந்த போலி காட்சிகளைப் பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ நிறுத்துங்கள்.
AI என்பது தவறான தகவல்களுக்கு அல்ல, நெறிமுறை படைப்பாற்றலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
நாம் என்ன உருவாக்குகிறோம், என்ன பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம், நன்றி என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / P YUVARAJ