Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் என்ற கல்லூரியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.. இந்நிலையில் இன்று காலை எம்.ஏ எக்னாமிக்ஸ் முதலாம் ஆண்டு படித்து வரும் 5 மாணவிகள், 9 மாணவர்கள் என மொத்தம் 14 மாணவ, மாணவிகள், விடுதியில் இருந்து பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் கவனர் கெஸ்ட் ஹவுஸ் பின்புறம் உள்ள கடற்கரை மணற்பரப்பில் மாணவ, மாணவிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது மாணவன் கவி பிரகாஷ் (21), முகமது ஆதில்(20), ரோஹித் சந்திரன் (20) ஆகிய மூன்று பேர் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.. அப்போது ரட்சத அலையில் சிக்கி மூன்று மாணவர்களும் கடலுக்கு இழுத்து செல்லப்பட்டனர்.. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனே கத்தி கூச்சலிடத்தை அடுத்து மாணவர்கள் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் இறங்கி
கவி பிரகாஷ், முகமது ஆதில் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவர் கவி பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. மேலும் மாணவன் முகமது ஆதிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தகவல் அறிந்து சாஸ்திரி நகர் போலீசார் தீயணைப்பு வீரர்களூடன் சென்று கடலுக்கு இழுத்து செல்லப்பட்ட ரோஹித் சந்திரன் உடலை தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேலும் சாஸ்திரி நகர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ