Enter your Email Address to subscribe to our newsletters
திருவண்ணாமலை, 11 அக்டோபர் (ஹி.ச.)
புரட்டாசி மாத இறுதி சனிக்கிழமையை முன்னிட்டு, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூத வடிவிலான பூத நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் நான்கு மாட வீதியில் அமைந்துள்ள, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூத வடிவிலான பூத நாராயண பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு பூத நாராயண பெருமாளுக்கு 100 லிட்டர் பால் மற்றும் பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு துளசி மாலை, வடை மாலை மற்றும் பல வண்ண மலர் மாலை அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூத நாராயண பெருமாளை வழிபட்டனர்.
அருள்மிகு பூத நாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி நான்காவது சனிக்கிழமையான இன்று பூத நாராயண பெருமாளுக்கு பட்டாட்சியர் சீகக்காய் தூள், பச்சரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சொர்ணாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு துளசி மாலை, வடைமாலை மற்றும் பல வண்ண மலர் மாலை அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது, சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூத நாராயண பெருமாலை கோவிந்தா கோவிந்தா என்று வழிபட்டுச் சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN