Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 11 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 1,791 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் இந்த திட்டம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. என்பதால் அதை கொண்டாடும் வகையில் நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ க்கள் மற்றும் அ.தி.மு.க வினர் உப்பிலிபாளையம் ரவுண்டானா அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக நிகழ்ச்சி நடத்தியதாக கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ க்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன், தாமோதரன், பி.ஆர்.ஜி அருண் குமார், உள்ளிட்டவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan