Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 11 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, அவிநாசி சாலையில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதால், உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாற்று ஏற்பாடு அவசியம் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை, அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூபாய் 1,791 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது.
இந்த மேம்பாலத்தில் நான்கு இடங்களில் ஏறுதளமும், நான்கு இடத்தில் இறங்கு தளமும் அமைக்கப்பட்டு உள்ளது.
அதில் அண்ணா சிலை அருகே உள்ள ஏறுதளம் நீதிமன்ற வழக்கு காரணமாக பணிகள் முடிக்கவில்லை, மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளதால், அதில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர். கோவையில் இருந்து திருப்பூர் மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்பவர்கள் இந்த மேம்பாலம் மிகவும் உதவியாக இருப்பதுடன், போக்குவரத்து நெருசலில் சிக்காமல் விமான நிலையம் சந்திப்பான சித்ரா பகுதியை கடந்து விடுவதால் பயண நேரமும் குறைகிறது.
இந்த சாலையில் ஹோப் காலேஜ் பகுதி உள்ளிட்ட இடங்களில் எப்பொழுதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும், ஆனால் மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளதால் தற்பொழுது அங்கு போக்குவரத்து நெரிசல் இல்லை, ஆனால் அவினாசி சாலை பழைய மேம்பாலம் மற்றும் அதன் கிழக்குப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாக வரும் வாகனங்களும் கலெக்டர் அலுவலகம் மற்றும் ரேஸ் கோர்ஸ் பகுதியில் செல்ல உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் திரும்பியதாலும், அதே நேரத்தில் புதிதாக திறக்கப்பட்ட அவிநாசி சாலை மேம்பாலத்தில் வந்த வாகனங்கள் உப்பிலிபாளையம் பகுதியில் இறங்கி, ரவுண்டானா பகுதிக்கு வந்ததாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கட்டும் அவதி அடைந்தனர்.
இதன் காரணமாக புதிய மேம்பாலத்தில் வரும் வாகனங்களில் உப்பிலிபாளையம் வரை செல்ல அனுமதிக்கப்படவில்லை, அவை அனைத்தும் அண்ணா சிலை அருகே இறங்கு தளத்தில் இறங்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. அத்துடன் உப்பிலிபாளையம் பகுதியில் வாகனங்கள் செல்லாமல், இருக்க மேம்பாலத்தில் தற்காலிகமாக தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் உப்பிலிபாளையம் ரவுண்டானா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தடுக்க, கோவை மாநகரப் போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
புதிதாக திறக்கப்பட்ட அவிநாசி சாலை மேம்பாலத்தில் வாகனங்கள் இறங்கும் பகுதியான உப்பிலிபாளையம் ரவுண்டானாவில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும், அதன் பின்னர் போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்யப்படும். பொதுவாக புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் செல்லும் போது அதிவேகத்தில் செல்வது வழக்கம். இதனால் விபத்து தான் ஏற்படும், எனவே அனைத்து வாகனங்களும் இந்த மேம்பாலத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் செல்ல வேண்டும், அதிவேகத்தில் செல்லக் கூடாது அது போன்ற வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்தி செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி யாராவது செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பது தெரிய வந்தால், கட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை கண்காணிக்க போக்குவரத்து காவல் துறை அவ்வப்போது பாலத்தில் ரோந்து சென்று வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும், வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் மெதுவாக சென்று விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினர்.
Hindusthan Samachar / V.srini Vasan