விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளித்து கொண்டாடும் சுற்றுலா பயணிகள்
தென்காசி, 11 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து வெக
Courtallam Falls


தென்காசி, 11 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டு வரும் நிலையில், இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள், குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து விடுமுறை தினத்தை ஆனந்தமாக அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, அருவிகளில் குறைந்த அளவே தண்ணீரானது கொட்டுகின்ற போதும் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து குற்றாலம் பகுதியில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆனந்த குளியலிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN