Enter your Email Address to subscribe to our newsletters
புனே, 11 அக்டோபர் (ஹி.ச.)
மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து டெல்லிக்கு இன்று (அக் 11) காலை ஆகாசா ஏர் விமானம் QP 1607 விமானம் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் மீது திடீரென பறவைகள் மோதின.
இதையடுத்து சாதுரியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
அவசர தரையிறக்கத்திற்கு பின்னர் பறவைகள் மோதிய ஆகாசா விமானத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த விமானம் டெல்லியில் இருந்து கோவா புறப்பட்ட இருந்த நிலையில் அந்த பயணம் மாற்று விமானம் மூலம் விமான சேவை தொடர்ந்து நடைபெற்றது.
Hindusthan Samachar / vidya.b