Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)
அக் 20 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நெல்லை, செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தீபாவளி பண்டிகையின்போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்:
ரெயில் எண்: 06156 திருநெல்வேலி – செங்கல்பட்டு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் அதிகாலை 04.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் (2 சேவைகள்).
மறுமார்க்கத்தில் ரெயில் எண்: 06155 செங்கல்பட்டு – திருநெல்வேலி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்
(2 சேவைகள்).
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b