Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் அணி சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் இன்று (அக் 11) நடைபெற்றது
முன்னதாக ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசியதாவது,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் பிரிவின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் நோக்கம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு தேர்தல் களத்தை சந்திக்கும்போது தேர்தல் களத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, களம் சமூகமாக இருப்பதற்கு வழக்கறிஞர் பிரிவு மிக முக்கியமான பிரிவு, இவர்களின் பணி ஆக்கபூர்வமான பணியாக இருக்க வேண்டும்.
அதற்காகத்தான் இந்த கூட்டம்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் குரல் சட்டப்பேரையில் ஒலிக்க வேண்டும் என யூகம் அமைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறோம். கரூர் சம்பவத்தில் குழப்பங்கள் தீர்க்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும்.
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் மோசமான நிலையில் கேள்விக்குறியாக உள்ளது. கொலை கொள்ளை திருட்டு பாலியல் போதைப்பொருள் அதிகரித்து வருகிறது இதை கட்டுப்படுத்த முடியாத அரசாக இந்த அரசு செயல்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்கள் குழந்தைகள் மீதான குற்றச்சம்பவங்கள் 50.71% அதிகரித்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா??
அதிமுக பாஜக கூட்டணியில் முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைப் போல ஒத்த கருத்துடைய பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டின் முதல் அணியாக மக்கள் மத்தியில் வலம் வந்து வருகிறது. திமுகவின் எதிர்மறை வாக்குகள் எங்கள் அணிக்கு வரும் அளவில் பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
ஜிஎஸ்டி குறைப்பு போன்ற மத்திய அரசின் நன்மை பயணிக்கும் நடவடிக்கைகள் எங்களுக்கு வாக்கு வங்கியாக மாறியுள்ளது.மடியில் கனமில்லை என்றால் வலியில் பயம் இருக்காது. பயம் இருந்தால் மட்டும் தான் அரசு கேபிள்களிலிருந்து தூக்குவார்கள்.
புதிய தலைமுறையை தமிழக அரசு கேபிளில் இருந்து நீக்கியதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் அறிக்கை விட்டதை நினைவு கூற விரும்புகிறேன்.
திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும். அந்தப் பணியை அதிமுக பாஜக எங்கள் கூட்டணியில் இருப்பதால் அது அவர்களின் முக்கிய பொறுப்பாக இருக்கிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்துள்ளது.
அழைப்பின் பெயரில் நாகேந்திரனின் மதுரை சுற்றுப்பயண பிரச்சாரத்தில் நாளை நான் கலந்து கொள்கிறேன்.
கூடுதல் இடம் கேட்க அதிகாரப்பூர்வ நேரம், காலம் இருக்கிறது நேரம் காலம் வரும்போது அதிகாரப்பூர்வமாக பேசுவோம்.
கூடுதல் இடங்களை எதிர்பார்க்க விருப்பம் இல்லாமல் கட்சி நடத்த முடியுமா?
விருப்பம் இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b