ஆந்திராவில் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் கூகுள் நிறுவனம் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு - முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்
விசாகப்பட்டினம், 11 அக்டோபர் (ஹி.ச.) ஆந்திராவில் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் கூகுள் நிறுவனம் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு கூறியதாவது: ஆந்திராவில் கூகுள் தகவல் மையம் மற்ற
ஆந்திராவில் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் கூகுள் நிறுவனம் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு - முதல்வர் சந்திரபாபு நாயுடு


விசாகப்பட்டினம், 11 அக்டோபர் (ஹி.ச.)

ஆந்திராவில் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் கூகுள் நிறுவனம் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு கூறியதாவது:

ஆந்திராவில் கூகுள் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிதி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இந்தத் திட்டங்களுக்காக விசாகப்பட்டினத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரேயடியாக 88 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.

விசாகப்பட்டினத்தின் தார்லுவாடா, அடவிவரம் மற்றும் ராம்பில்லி ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைய உள்ளன.

2047 க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிடும். அதில் முதன்மையான மாநிலமாக ஆந்திரா இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM