Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)
சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் நடத்தி வரும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது
எல்பிஜி கேஸ் என்பது அத்தியாவசிய பொருள், அதை விநியோகம் செய்யாமல் இருப்பது சட்டவிரோதம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்த போராட்டம் காராணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும், எண்ணெய் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்தம் ஈடுபடாமல் மாநிலம் முழுவதும் எல்பிஜி விநியோகம் செய்ய நாமக்கலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு
வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்பட உள்ளது.
2025-2030 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தபடி விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளால் 700 க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு பணி வழங்கவில்லை என்பதை கண்டித்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் 5500 மேற்பட்ட டேங்கர் லாரிகளை இயக்காமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ