ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50-வது முறை கூறிவிட்டார் - ஜெய்ராம் ரமேஷ் சாடல்
புதுடெல்லி, 11 அக்டோபர் (ஹி.ச.) காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், டிரம்ப் பேசும் வீடியோ காட்சியை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவத
ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50-வது முறை கூறிவிட்டார் - ஜெய்ராம் ரமேஷ் சாடல்


புதுடெல்லி, 11 அக்டோபர் (ஹி.ச.)

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், டிரம்ப் பேசும் வீடியோ காட்சியை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் மோடி நாள் முழுவதும் இங்கிலாந்து பிரதமருடன் பேசி ஜனாதிபதி டிரம்புக்கு பாராட்டு செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் உடனான சந்திப்பின்போது,​ ஜனாதிபதி டிரம்ப், வர்த்தகம் மற்றும் வரிகளை தனது பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்தி ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக 50-வது முறையாக கூறிவிட்டார்.

விரைவில் அவர் ஒரு சதம் அடிக்க நீண்ட காலம் ஆகாது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM