Enter your Email Address to subscribe to our newsletters
கிருஷ்ணகிரி, 11 அக்டோபர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த என் தட்டக்கல் கிராமத்தில் உள்ள அருள்மிகு கூத்தாண்டவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி 25 சனிக்கிழமை நாளான இன்று,
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த குறும்பன் இன மக்களின் குலதெய்வமான இக் கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து இன்று இக் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
இக்கோவிலில் கூத்தாண்டவர் என்ற தெய்வமும், பெருமாள் தெய்வமும் வணங்கப்படுகின்றன.
இக்கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் கோயில் சார்பாக அன்னதானம் செய்யப்பட்டு இருந்தது.
கோவிலின் சிறப்பாக குறும்பன் இன மக்கள் வேண்டுதலின்படி அவர்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்திருந்தனர்.
Hindusthan Samachar / Durai.J