நவம்பர் மாதம் 27ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி, 11 அக்டோபர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட
நவம்பர் மாதம் 27ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்  பணிகள் தொடக்கம்


கள்ளக்குறிச்சி, 11 அக்டோபர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புனரமைப்பு பணி தொடங்கிய நிலையில் போதிய நிதி இல்லாததால் திருப்பணிகள் பாதியில் நின்றது. அதன் பின்னர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கோவிலில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

மீண்டும் திருப்பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், கும்பாபிஷேகத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கும்பாபிஷேக விழாவிற்கான பூர்வாங்க பூஜைக்குரிய பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ரீஷோடச மகா கணபதி ஹோமம், பிரும் மச்சாரி பூஜை, மனபூஜை, லட்சுமி ஹோமம், கன்யா பூஜை ஆகியன நடைபெற்ற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b