Enter your Email Address to subscribe to our newsletters
கோவில்பட்டி, 11 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கொடுக்கம்பாறை ஊராட்சிக்குட்பட்ட விஜயாபுரி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் தங்கள் கிராமத்தில் குடிதண்ணீர் பிரச்சினை இருப்பதாகவும், சில இடங்களுக்கு தண்ணீர் வருவதில் சிரமம் இருப்பதாகவும், உப்புத் தண்ணீர் முறையாக கிடைப்பதில்லை என்றும் அதனை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அரசு உயர்நிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும், மேல்நிலைப்பள்ளி இல்லை என்பதால் உயர் கல்வி பெற தங்கள் கிராம மக்கள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
போதுமான பஸ் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,
குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உப்புத் தண்ணீர் செல்ல முடியாத பகுதிகளில் போர்வெல் அமைத்து தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பு கரங்கள் திட்டம் மூலமாக ஆதரவற்று குழந்தைகளுக்கு மாதந்தோறும் அன்பு கரங்கள் திட்டம் மூலமாக ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.
Hindusthan Samachar / Durai.J