அரசு மைய அச்சகத்தில் 70 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள பேப்பர் கட்டிங் இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.) சென்னை தங்க சாலையில் உள்ள அரசு அச்சகத்தில் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் அரசு மைய அச்சகத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய இயந்திரத்தினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பயன்ப
Saminadhan


சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை தங்க சாலையில் உள்ள அரசு அச்சகத்தில்

எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் அரசு மைய அச்சகத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய இயந்திரத்தினை

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து புனரமைக்கப்பட்ட பாரம்பரிய கட்டடத்தினை பார்வையிட்டார்.

இந்நிகச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது,

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய இயந்திரங்கள் அச்சகத்தில் பொருத்தப்பட்டு நவீனமாக்கப்பட்டுள்ளதாகவும்

தமிழ்நாடு அரசு எழுது பொருள்கள் அச்சு துறை சார்பில் அரசு மைய அச்சகத்தில் 70 லட்சம் மதிப்பிலான பேப்பர் கட்டிங் இயந்திரம் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டதாகவும் 180 ஆண்டுகள் பழமையான கட்டிடம்

ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது, 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது என்றும் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைப்பார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர் சேலம் விருத்தாசலம் மதுரை போன்ற பகுதிகளில் அச்சகங்கள் சிறப்பாக உள்ளன என்றும் சென்னையில் உள்ள அரசு மைய அச்சகம் மிகப் பழமையான கட்டிடம் என்பதால் இதனை மாணவர்கள் பார்வையிடுவதற்கு அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

தமிழக பாடநூல் கழக புத்தகங்கள் உள்ளிட்ட அச்சிடும் பணிகள் வெளிமாநிலங்களில் அச்சிடப்பவதாக கூறப்படுகிறது. ஆகவே தமிழ்நாட்டிலேயே அச்சிடுவதற்கு தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,

தமிழ்நாட்டில் அந்த அச்சுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான சாத்தியக்கூறுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ