Enter your Email Address to subscribe to our newsletters
ராமநாதபுரம், 11 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றங்கள், திமுக அரசுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக கிட்னி முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான வழக்கிலும் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கரூரில் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்து உள்ளது.
இதுபோல பல்வேறு வழக்குகளிலும் திமுக அரசுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம், நேற்று பல்வேறு வழக்குகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்புகள், திமுக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதே என்று கேட்டதற்கு,
அவற்றையெல்லாம் சட்டப்படி சந்திப்போம். மேல் முறையீடு இருக்கிறது அல்லவா? அதில் பார்த்துக் கொள்வோம் என்று கூறி அங்கிருந்து நழுவினார்.
Hindusthan Samachar / ANANDHAN