நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் - பயணிகள் அச்சம்
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.) மதுரையில் இருந்து இன்று (அக் 11) அதிகாலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விரிசல் ஏற்பட்டது.
நடுவானில் பிறந்து கொண்டிருந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் - பயணிகள் அச்சம்


சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)

மதுரையில் இருந்து இன்று (அக் 11) அதிகாலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விரிசல் ஏற்பட்டது.

இதனை கவனித்த விமானி உடனடியாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விமானி தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து விமானி விமானத்தை பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 74 பயணிகள், 5 விமான பணியாளர்கள் என மொத்தம் 79 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மேலும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மதுரைக்கு விமானம் திரும்பும் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடுவானில் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் விமான பயணிகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b