Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் அக் 14 ஆம் தேதி மின்தடை ஏற்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 14.10.2025, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆவடி: கோவில் பதாகை, பூங்கா தெரு, அசோக்நகர், பைபிள் கல்லூரி, கிறிஸ்ட் காலனி, நாகம்மைநகர், எட்டியம்மன்நகர், கிருபாநகர்.
தென்றல்நகர், பாலாஜிநகர், சிடி சாலை, ஆவடி, டிவி ஷோரூம், பி வெல் மருத்துவமனை.
திருமுல்லைவாயல்: மோரை, வீராபுரம், கன்னியம்மன் நகர், டிஎஸ்பி முகாம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b