Enter your Email Address to subscribe to our newsletters
காரைக்கால், 11 அக்டோபர் (ஹி.ச.)
காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி காரைக்கால் NIT-யில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்வில்,
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சர்கள் லெட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நாக தியாகராஜன், ஜி.என்.எஸ்.ராஜசேகரன், அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
காரைக்காலில் 2012-ம் ஆண்டு ரூ.47.74 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மீன் பிடித்துறைமுகத்தில் தற்போது பாதுகாவலர் அறை, படகு பழுது நீக்கும் பணிமனை, உணவகம், வலை பாதுகாப்பு அறைகள், பனிக்கட்டி உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.130 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J